Skip to content
Home » கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து பூஜித்து வழிபடுவர். பண்டிகை தினம் நெருங்கியுள்ள சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

சேலம், நாமக்கல், தர்மபுரி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தாண்டு செவ்வந்திப் பூ நல்ல விளைச்சல் உள்ளதால் செவ்வந்தி

சராசரியாக ரூ.200 என்ற விலைக்கு விற்பனையாகின்றன.

தற்போதைய சூழலில் கோவை பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூ தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோழிக்கொண்டை ரூ.60 முதல் ரூ.100க்கும்,செண்டு மல்லி ரூ.60 முதல் ரூ.70க்கும்,சம்பங்கி ரூ.200க்கும் விற்பனையாகிறது.அரளி ரூ.300 முதல் ரூ.400க்கும், மல்லி ரூ.800- 1000 வரையும் விற்பனையாகின்றன.

பழங்களை பொறுத்தவரையில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180 ஆரஞ்சு ரூ.70 முதல் ரூ.80, மாதுளை ரூ.200 முதல் ரூ.240,திராட்சை ரூ.120 முதல் ரூ.140, சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.80, கரும்பு ஜோடி ரூ.100க்கும்வாழை மரம் ஜோடி ரூ.40க்கும், வெள்ளை பூசனி கிலோ ரூ.30க்கும் வியாபாரம் செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *