கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் வசிப்பவர் மனோபிரபா . பெயிண்டர் வேலை பார்த்து இவர் வீட்டில் நள்ளிரவு 2 மணியளவில் உறங்கி கொண்டிருந்தார்.
அப்பொழுது வீட்டில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவு வீடு முழுவதும் பரவிய நிலையில் மூச்சு திணறுலுக்கு ஆளான மனோ பிரபா தூக்கத்திலிருந்து எழுந்து மின்விளக்கை
இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதமாக குளிர்சாதன பெட்டி திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மளமளவென பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.