திருச்சி அரியமங்கலம் பகுதியில் திருச்சி பறித்துச் சென்ற நபரை அரியமங்கலம் போலீசார் கைது செய்து – அரிவாள், பணம், கார், ஆப்பிள் போன் பறிமுதல்
திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் இவரது மகன் டோனி (34)
கடந்த இரண்டு வருடங்களாக அந்த பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மர்ம நபர் ஒருவர் வெள்ளை நிற காரின் அருகில் நின்று கொண்டிருந்தவர் ஏர்போர்ட் செல்வதற்கு வழி
கேட்டபடியே டோனி கழுத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி டோனி பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து ஓடி உள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக டோனி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து தஞ்சை நாஞ்சிகோட்டை சாலை முனியாண்டவர் காலனியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் மார்ட்டின் (43) என்பவரை அம்மாகுளம் பஸ் ஸ்டாப் அருகில் அரியமங்கம் போலீசார் நேற்று மதியம் கைது செய்து அவரிடமிருந்து வெள்ளை நிறம் கொண்ட டஸ்டர் கார்,
ஆப்பிள் போன்,
பணம் , அரிவாள் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
மார்ட்டினை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.