ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி முன்னிட்டு காய்கறிகள், பூக்கள் , வாழை கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்தால் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் பொருட்களின் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்பவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இன்றைய தினம் திருச்சி காந்தி மார்கெட்டில் :
மலர்களின் விலை நிலவரம் (கிலோ ஒன்றுக்கு)
மல்லிகைப்பூ கிலோ – 600 முதல் 800 வரை
முல்லைப் பூ கிலோ – 600 முதல் 800 வரை
கனகாம்பரம் – கிலோ 800
செவ்வந்தி கிலோ -300
ரோஸ் கிலோ – 400
சம்பங்கி கிலோ – 300
விச்சிப்பூ கிலோ – 250
என விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல்
பொரி ஒரு படி – 10 ரூபாய்
வாழை கன்று ஜோடி – 25
பூசணி ஒன்று – 80
வாழை பழம் சீப்பு – 50 ரூபாய் என
தேங்காய் ஒன்று – 15 முதல் 25 ரூபாய்
வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பழங்களில் விலை பண்டிகை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது