திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரா சாமிகள் மடலாயத்தில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி மாணவர் அணி இளைஞர் அணி சார்பில் மாபெரும் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தர்மன்ராஜேந்திரன், திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ். வருண்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் காடுவெட்டி கே.டி .அகதீஸ்வரன், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் வரதராஜபுரம் டி.கே.மகாமுனி, சேர்மன் கிருஷ்ணவேணி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவர் கே. எம்.சிவசெல்வராஜ் தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் திருச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ. ஆர்.கே கார்த்திக் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற நீட்டை எதிர்த்து நடந்த மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
காட்டுப்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை கழகப் பேச்சாளர் கவிஞர் சல்மா பேசியதாவது
நீட் விலக்கு நம் இலக்கு என்ற கோட்பாட்டில் 50 -நாளில் 50 -லட்சம் கையெழுத்துகளை பெற இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெற்று வருகிறது தமிழக மாணவ மாணவிகளின் உயர்கல்வி கற்க கூடாது அவர்களின் கல்வியை
பிடுங்கிக் கொல்ல மத்திய அரசு நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்து வைத்துள்ளது.தமிழகத்தில் மட்டும் 35- மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை மருத்துவக் கல்லூரிகள் இடம் பெறவில்லை தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் நமது மருத்துவ கட்டமைப்பை கண்டு மிகவும் வியந்து பாராட்டினர் பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவம் பெற மட்டும் தமிழகத்தை நாடி வருகின்றனர் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் மக்கள் போராட்டமாக அமைய வேண்டும் தமிழக மாணவ மாணவிகளின் அறிவுத்திறனையும் இங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது 50 நாட்களில் ஐம்பது லட்சம் மட்டும் இல்லாமல் ஒரு கோடிக்கு மேலான கையெழுத்தை நாம் பெறுவோம் இவ்வாறு அவர் பேசினார்
இந்த நிகழ்ச்சியில் தொட்டியம், , முசிறி தா.பேட்டை மேட்டுப்பாளையம் மண்ணச்சநல்லூர் திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மருத்துவ அணியினர், மாணவர் அணியினர் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், வடக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக திருச்சி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ஏ.பி.எஸ். சத்தியபிரகாஷ் செய்து அனைவருக்கும் நன்றி கூறினார்.