திருச்சி சீராதோப்பில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை ஆலயத்தில் நவராத்திரி விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவராத்திரி விழாவில் 7-ம் நாளைதொடர்ந்து தாமரை மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டு மற்றும் ஆபரணங்கள் சாற்றப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.