Skip to content
Home » பாஜக கொடிக்கம்பம் விவகாரம்.. அமர் பிரசாத் ரெட்டிக்கு புழல்..

பாஜக கொடிக்கம்பம் விவகாரம்.. அமர் பிரசாத் ரெட்டிக்கு புழல்..

தாம்பரம் மாநகரக் போலீஸ் சரகம் பள்ளிக்கரணை காவல் மாவட்டம், T20 கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் தேதி மாலை ஏழு மணிக்கு முன்பு அண்ணாமலை வீட்டு காம்பவுண்ட் சுவர் முன்பாக பொது இடத்தில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூராகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டது.  சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேற்படிகொடி கம்பத்தை சென்னை பெருநகர மாநகராட்சியினரும், போலீசாரும் அகற்ற முடிவு செய்து அதனை பிஜேபி கட்சியினருக்கு தெரியபடுத்தி இரவு 8 மணிக்கு போலீசார் உதவியுடன் கொடிக்கம்பத்தை அகற்ற முற்படும் போது பிஜேபி துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு தர்ணா செய்தவர்களை பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது T20 கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த JCB இயந்திரத்தை கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்த 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொடிக்கம்பத்தை அகற்றிய ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை நேற்று இரவு போலீசார் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *