திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி பெண் மேலாளரை கொலை செய்துவிட்டு மற்றொரு மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கரூ் வைஸ்சியா வங்கி மேலாளராக பணிபுரியும் மதுரா என்பவர் திண்டிவனம் அருகே காரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகிலேயே லாரி மோதி மற்றொருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரியில் அடிபட்டு இறந்தவர் கோபிநாத் என்றும், இவர் மரக்காணத்தில் உள்ள கரூர் வைஸ்சியா வங்கி மேலாளராக பணியாற்றியவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே வங்கியின் இருவேறு கிளைகளில் பணியாற்றியவர்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வங்கி மேலாளர் மதுராவை மற்றொரு மேலாளர் கோபிநாத் ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மதுராவை கொன்றுவிட்டு கோபிநாத் லாரியில் பாய்ந்து தற்கொலை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. நேற்று மரக்காணம் புதிய வங்கி கிளை பூஜை போடும் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றுள்ளனர். ஒன்றாக வங்கி கிளை விழாவில் பங்கேற்ற இருவரும் மறுநாளே இறந்ததற்கான காரணம் குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.