திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக புகழ்வாய்ந்த ஊட்டி மலை ரயில் எஞ்சின் பராமரிப்பு பணிகள் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிமனை தொடங்கி 96 வருடங்கள் ஆகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பணிமனை முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை வல்லுனர்களால்
வடிவமைக்கப்பட்டது. இந்த பணிமனையில் ஆயுதபூஜையை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும்
பொதுவாக ரயில் பயணம் என்றாலே பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் அலாதி பிரியம் அதை நேரில் பார்ப்பது வென்றால் இன்னும் அலாதி பிரியம் இந்த நிலையில் பொதுமக்கள் குழந்தைகள் ரயில்வே பணிமனையை இன்று சுற்றி பார்த்து ரயிலில் ஏறி புகைப்படம் எடுத்தும் ரயில் உதிரி பாகங்கள் முன்பு நின்ற
புகைப்படம் எடுத்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அந்தந்த ஒர்க் ஷாப்புகளில் ஆயுதங்களுக்கு பூஜைகளை நடத்தி வழிபட்டனர்