“நீட் விலக்கு” “நம் இலக்கு” கையெழுத்து இயக்கம் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று குடியரசு தலைவருக்கு தபால் கார்டு அனுப்பும் பணியிணை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தன்னார்வலர்கள் மற்றும் திமுகவினரிடையே கலந்துரையாடினார். இதைப்போல் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திமுக நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில்,
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கௌதமன் தலைமையில், திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நீட்டுக்கு விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் தபால் கார்டில் கையெழுத்திட்டு அதனை அங்கிருந்த பெட்டில் செலுத்தினர். பின்னர் நீட் விலக்கு கோரி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த திமுகவினர்,பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் தபால் கார்டில் கையெழுத்து பெற்று, குடியரசு தலைவருக்கு தங்களது வேண்டுகோளை தபால் கார்டு மூலம் அனுப்பி வைக்கும் பணியினையும் மேற்கொண்டனர்.