தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை முதல் 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் இன்றே தொடங்கியுள்ளது வடகிழக்கு பருவமழை. தென் தமிழகம், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மீனவர்கள் அக்டோபர் 25 வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் அக்26ம் தேதி வங்ககடலுக்கும் செல்ல வேண்டும். நெல்லை, குமரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.