இயக்குநர் ஹரி சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இயக்குநர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் (எண் 10, ஶ்ரீநிவாசன் தெரு, பலராம் காலனி, சென்னை 93) திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்படவுள்ளது. பின்னர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் டைரக்டர் ஹரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.