திருச்சி பொன்மலைப்பட்டி ஜீவா நகர் 4வது குறுக்குத் தேர்வை சேர்ந்தவர் ஜான் பேனர்ஜி வயது (56) இவர் பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் பொன்மலை செந்தண்ணீர்புரம் ரயில்வே டீசல் செட்டில் வேலை பார்த்து வரும் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண் ஊழியரிடம் ஜான் பேனர்ஜி சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக கொடுத்த பணத்தை ஜான் பேனர்ஜி சரோஜாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் இன்று செந்தண்ணீர்புரத்திற்கு சென்று சரோஜாவிடம் பணத்தைக் கேட்டுள்ளார் அப்போது சரோஜா பணத்தை தர மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜான் பேனர்ஜி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரயில்வே பெண் ஊழியர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பைனான்சியருக்கு கொலை மிரட்டல்…ரயில்வே பெண் ஊழியர் அடாவடி..
- by Authour