பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளில் 11,630 நபர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.26.84 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது – 1,41,437 குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல்
பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், இன்று (19.10.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வழங்கினார். மேலும், 108- அவசரகால ஊர்தி ஓட்டுநராக இருந்து பணியின் போது விபத்தில் சிக்கி மரணமடைந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சுகந்தியிடம் GREEN HEALTH SERVICE, நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகையாக ரூ.5,00,000 க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்(பொ) மரு.இளவரசன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் ஹிலாலுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.