பெரும் பரபரப்புக்கும், பிரச்னைகளுக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று திரைக்கு வந்தது. தமிழ்நாட்டைத் தவிர ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிகாலையிலேயே முதல் காட்சி திரையிடப்பட்டது. 8 மணிக்கு முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
முதல் பாதி படம் சூப்பராக இருப்பதாகவும், இரண்டாவது பாதி சுமாராக இருப்பதாகவும் , அதில் படக்குழுவினர் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் , 2வது பாதி பார்த்த கதையாகத்தான் இருக்கிறது. கமலின் விக்ரம் கூட இதை ஒப்பிட முடியாது. முதல்பாதி லோகேஷ் படம் மாதிரி இருக்கிறது. 2ம் பாதி அப்படி இல்லை என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
history of voilence என்ற ஆங்கில படத்தின் தழுவல் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து விட்டதால், இது ரசிகர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை தரவில்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர். வெளிமாநில ரசிர்கர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது.
தமிழக ரசிகர்களும் அதேபோன்ற விமர்சனங்களைத்தான் வைத்துள்ளனர். பார்த்திபன் (விஜய்) தனது மனைவி சத்யா (த்ரிஷா) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹிமாச்சல பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே ஒரு சிறிய காபி கடை வைத்து ஒரு வரும் அவர் அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
அங்கே ஒரு சிறிய காபி கடை வைத்து நடத்தி வரும் அவர் அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை மூலம் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருப்பினும், அவரது மகிழ்ச்சி நீண்ட காலம்நீடிக்கவில்லை. எதிர்பாராத விதமாக பார்த்திபனுக்கு(விஜய்க்கு) சிலருடன் சண்டை ஏற்படுகிறது . இதனால் பார்த்திபன்(விஜய்) இமாச்சல பிரதேசம் முழுவதும்பிரபலமாகிறார். அதன் பிறகு ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்) பார்த்திபனை கவனிக்கிறார்கள். பார்த்திபனின் செயல்கள் பழைய எதிரியான லியோ தாஸை நினைவுபடுத்துகின்றன- இது தான் லியோ கதை.
லோகேஷ் கனகராஜ் தனக்கே உரித்தான பாணியில் விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு விறுவிறுப்பூட்டுகிறது. விஜயை தனக்கு ஏற்றபடி மாற்றி இருக்கிறார் இயக்குனர். வில்லன்கள் யாரும் மனதில் நிற்காதது ஒரு குறைதான். படத்தின் நீளத்தையும், சண்டைகாட்சிகளையும் குறைத்திருக்கலாம். விஜய் லியோவாக இருந்தாலும், அதன் கர்ஜனை ரசிா்களை தாண்டி செல்லுமா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.