தஞ்சை நகரப் பகுதிகளில் இரண்டு திரையரங்குகளில் இன்று லியோ படம் வெளியானது. இதையடுத்து பிளக்ஸ், போஸ்டர் என்று தியேட்டரை திருவிழா போல் ரசிகர்கள் அலங்கரித்து இருந்தனர். இன்று காலை 7.30 மணியிலிருந்து தியேட்டர் வாசலில் ரசிகர்கள் குவிந்தனர். தொடர்ந்து லியோ படத்தை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
திரையரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக வரிசையில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் படத்தை பார்க்க உற்சாகமாக திரையரங்கிற்குள் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் திரையரங்கு வெளியே டிக்கெட்டுகள் கூடுதலாக
விற்கப்படுவதாக ரசிகர்கள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் டிக்கெட் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைய முற்பட்டவர்களை வெளியில் தள்ளி கேட்டை இழுத்து மூடினர். தொடர்ந்து தஞ்சை மாவட்ட மக்கள் இயக்க தலைவர் விஜய். சரவணன் தலைமையில் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் கோஷம் எழுப்பினர்.