Skip to content
Home » இந்தியாவை வென்றால்…வங்கதேச வீரர்களுக்கு விருந்து ….. தருவேன் என்கிறார் பாக் நடிகை

இந்தியாவை வென்றால்…வங்கதேச வீரர்களுக்கு விருந்து ….. தருவேன் என்கிறார் பாக் நடிகை

  • by Senthil
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று நடைபெற உள்ள  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்  இந்தியா- வங்கதேச அணிகள் மோதுகிறது.  இந்தியாவை தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் தன்னுடன் அமர்ந்து சாப்பிடலாம் என பாகிஸ்தான் நடிகை  செகர் ஷின்வாரி தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், ’வங்கதேச அணி இந்தியாவை வென்றால், அவர்களுடன் இணைந்து டாக்காவில் மீன் குழம்பு உணவைச் சாப்பிட ஏற்பாடு செய்வேன்’ என அதில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெறும் என்றும்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, ஏற்கெனவே தாம் சந்தித்த 3 லீக் போட்டிகளிலும் (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தாம் சந்தித்த 3 போட்டிகளில் (நெதர்லாந்து, இலங்கை, இந்தியா) 2இல் வெற்றிபெற்று 4வது இடத்தில் உள்ளது. இதில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது.   கடந்த மாதம்  15ம் தேதி  நடந்த ஆசிய கோப்பை  லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்தது. இதை வைத்துத்தான் வங்கதேசம், இந்தியாவை தோற்கடிக்கும் என நடிகை செகர் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த நடிகை எப்போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில்  கவனமாக இருப்பவர்.

 ஏறடகனவெ கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின்போது, இவர்தான் “இந்தியா தோல்வியடைய வேண்டும்’ என ட்வீட் செய்திருந்ததுடன், ’ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ‘ஜிம்பாப்வே பையனை’ திருமணம் செய்துகொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!