108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் கோயிலாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள், சுற்றுலா பிரியர்கள் வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள கருடாழ்வார், ஆரியபட்டா வாசல் வழியாக அரங்கநாதர், பின்னர் ரங்கநாயகி தாயாரை இன்று காலை தரிசனம் செய்தார். அங்கு வந்த துர்கா ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகம் சார்பிலும், தலைமை பட்டர் சுந்தர் அவர்களின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.