Skip to content
Home » 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட  கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதில், கிராமக் கணக்குகளில் உரிய மாறுதல் மேற்கொள்ளப்படாமல் இருந்த பட்டாக்கள் சரி செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதலமைச்சர்  அறிவுறுத்தியதற்கிணங்க, 16,496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டு, அதற்கான பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 15 பயனாளிகளுக்கு கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்   கே.என். நேரு,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ. அன்பரசன்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா,  அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர. ராகுல்நாத்,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன்,   திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.த.பிரபு சங்கர்,   சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!