தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. அய்யம் பேட்டை எலைட் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதகர்கள் சிராஜுதின், நிஷா ஆகியோர் 228 மாணவ, மாணவிகளின் கண்களை பரிசோதித்தனர். கண்ணில் குறைபாடு உடைய 13 பேரை கண்ணாடி அணிய பரிந்துரைத்தனர். இதேப் போன்று பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கிழக்கு, மேற்கில் 40 மாணவர்களின் கண்களில் பரிசோதனை மேற்க் கொள்ளப் பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜாமுகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், கணேசன், நவநீத கிருஷ்ணன், அப்பாஸ், செங்குட்டுவன், பள்ளித் தலைமையாசிரியர் சுரேந்திரநாத், உதவித் தலைமையாசிரியை உமா மகேஸ்வரி உட்பட பங்கேற்றனர்.
