Skip to content
Home » திருநாவுக்கரசர் எம்.பியை கண்டித்து… காங். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு… திருச்சியில் பரபரப்பு

திருநாவுக்கரசர் எம்.பியை கண்டித்து… காங். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு… திருச்சியில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக ஜவகர் செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மாநகர் மாவட்ட பதவியிலிருந்து ஜவகர் நீக்கப்பட்டு புதிய மாநகர் மாவட்ட தலைவராக திருச்சி மாநகராட்சி  39 வது வார்டு உறுப்பினர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.

திருச்சி  எம் பி திருநாவுக்கரசர்  சிபாரின் பெயரில் தான்  ஜவஹர் நீக்கப்பட்டு, ரெக்ஸ்  புதிதாக நியமிக்கப்பட்டதாக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங் நிர்வாகிகள், தொண்டர்கள், திருநாவுக்கரசர் எம்.பிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்  மாவட்ட அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு எம் பி திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்து உடைத்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு  50க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநாவுக்கரசரையும், ரெக்சையும் கண்டித்து கோஷங்கள் போட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை மதிக்காமல் செயல்படுவதாகவும் கட்சியின்  மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆன ஒருவரை மாவட்ட தலைவராக  நியமித்திருப்பது கண்டனத்துக்கு உரியது எனவும்  தொண்டர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *