இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக, சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை கண்டித்தும், ஒரு தலைப்பட்சமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இந்து ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாரதாரத்தை பாதுகாக்கவும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி திருச்சி மாவட்ட
செயலாளர் பாண்டியன் தலைமையில், சமயபுரம் நால் ரோட்டில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்பொழுது சமயபுரம் காவல் போலீசார் ஆய்வாளர் கருணாகரன் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதை ஏற்க மறுத்த ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தைச் சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.