புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.61.53 லட்சம் மதிப்பீட்டில் காலகம் முதல் ஆவுடையார்கோவில் வரை மேற்கொள்ளப்பட்டுவரும் முடிவுற்ற சாலைப் பணியினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (17.10.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழுத் தலைவர் செல்வி.உமாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.