Skip to content
Home » தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தீபாவளி பண்டிகை…திருச்சியில் பலகாரங்கள் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள், இனிப்புகள் கார வகைகள், பேக்கிரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுடன் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் |மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவின்படி மேற்கண்ட உணவு தயாரிப்பளர் மற்றும் விற்பணையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்பு துறை மாநில இணை ஆணையர் தேவபார்த்தசாரதி, தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை ரமேஷ்பாபு முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பேக்கரி சங்கத்தை சார்ந்த செயலாலர் முகமது கமால் மற்றும் துணை தலைவர் ஆனந்த பாபு ஆகியோர் சிற்ப்புரையாற்றினார்கள். இந்தக்கூட்டத்திற்க்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள்

சையது இப்ராஹீம்,ஸ்டாலின் பிரபு , பொன்ராஜ், வசந்தன், பாண்டி ,செல்வராஜ் , வடிவேல், அன்பு செல்வன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.. .

இந்தக்கூட்டத்தில் மாநில இணை ஆணையர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள், பேக்கரி உணவு பொருட்கள் விற்பனையாளர்கள், மற்றும் கார பலகார வகைகள் செய்து தரும் வியாபாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி உரிமம்/பதிவு சான்றுகள் உணவு பாதுகாப்புத் துறை மூலம் கட்டாயமாக பெறவேண்டும்.

மேலும் இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் கலப்படமில்லாத சுத்தமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் . அவ்வுணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ பயன்படுத்தக்கூடாது என்றும் மேலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவறுத்தப்பட்டது.

மேலும் பொட்டலமிடப்படும் அனைத்து இனிப்பு மற்றும் பலகார வகைகளில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, FSSAI எண் மற்றும் Batch எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.

இவ்வுணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத வகையில் பலகாரங்களை தூசிபடாத வண்ணம் மூடி வைத்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்க புறம்பாக இருந்தாலோ அத்தகையை உணவு வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை மாநில இணை ஆணையர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

மேலும் நியமன அலுவலர் கூறுகையில் உணவு பாதுகாப்பு துறையை சார்ந்தவர்களே அல்லது உணவ பாதுகாப்பு துறையின் பெயரை பயன்படுத்தியோ யாராவது பண்டிகை காலத்தை முன்னிட்டு தவறான நோக்கத்தில் அனுகினால் ஊழல் தடுப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் பொதுமாக்களும் உணவு கலப்பட பொருட்களை கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆப் மூலமாவோ தகவல் தெரிவிக்கலாம் . தகவல் தெரிவிப்பவரின் முகவரி ரகசியம் கக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
உணவு கலப்பட புகாருக்கு 94 44 04 23 22 , 99 44 95 95 95

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!