Skip to content
Home » பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தமைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தமிழக அரசு 2019 மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் திருத்தங்களோடு அமல்படுத்த வேண்டும், அநியாய ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

ஓலா, ஊபர்,போர்ட்டர், ரெட் டாக்ஸி, பாஸ்ட் ட்ராக், போன்ற செயலி வடிவில் இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வேண்டும், ஆட்டோக்களை போன்று கால் டாக்ஸிகளுக்கும் கட்டண நிர்ணயம் செய்திட வேண்டும், சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசின் வரி வருவாயேயும் உறுதி செய்திட வேண்டும், பைக் டாக்ஸிகளை தமிழகத்தில் தடை செய்ய

வேண்டும், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி> திருச்சி மேற்கு ஆர்டிஓ அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *