தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களால் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை வழங்கி தர்மபுரி செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.மேலும் வாச்சாத்தி கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ். அதிகாரி எல்.நாதன், பாலாஜி ஆகியோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.