திருச்சி விமான நிலையத்தில் நேற்று சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது சார்ஜாவிலிருந்து வந்த பயணி தங்க துகள்களை பாலிதீன் ஷீட்டில் தூவி அட்டை பெட்டியில் சுற்றி எடுத்து வந்துள்ளார், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி இன்ஜின்களில் உள்ள பிஸ்டனில் தங்கத்தை மறைத்து
வைத்து எடுத்து வந்துள்ளார், துபாயில் இருந்து வந்த பயணி இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ் பவுடரில் தங்கத்தை பொடியாக்கி கலந்து எடுத்து வந்துள்ளார். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் கடத்தி வந்த மொத்த தங்கத்தின் எடை 430 கிராம், இதன் மதிப்பு ரூ.25 லட்சத்து 88 ஆயிரம் ஆகும்.