லியோ படம் வரும் 19ம் தேதி வௌியாகிறது. இப்படம் வௌியாகும் நாளில் 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி முதல் அனுமதி கோரி விண்ணப்பிக்க பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவன கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5காட்சிகளுக்கு அனமதி அளித்ததால் தானே தற்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 7 மணி காட்சிக்கு கூட அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு எதற்கு அனுமதியக்கிறீர்கள் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது, அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இடைவௌி நேரத்தை குறைத்துக்கொள்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது. தியேட்டர் நிர்வாகம் தான் கூற முடியும் என அரசு வக்கீல் தெரிவித்தார். 9 மணி காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி, அதனை மீற முடியாது . லியோ படம் 2 மணி 39 நிமிடங்கள் நீளம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் என அரசு தரப்பு தெரிவித்தது. இந்த விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 4 மணி காட்சிக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.