திருச்சி மாநகர காவல்துறையில் காவல் ஆணையர் முதல் காவலர்கள் வரை திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் ஆய்வு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் திருச்சி மாநகர கமிஷனர் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை (Modern Control Room) ஆய்வு செய்தார். ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகளை குறித்தும், CCTV கேமராக்களின் செயல்படும் நிலை (Working Condition) குறித்தும் ஆய்வு செய்தார்கள். திருச்சி மாநகரரில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்றசெயல்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டுபிடிக்கவும் மாநகர பகுதி முழுவதும் மொத்தம் 1129 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் 710 கேமராக்கள் தற்போதுவரை நல்ல முறையில் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்பு உதவியுடன்(Sponsor) பொருத்தப்பட்டுள்ள 419 கேமராக்கள் மட்டுமே இயங்காமல் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. மேற்கண்ட பழுதை நிவர்த்தி செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்திரவின்பேரில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் என்பதை கண்டறிந்து இதை சீர்செய்யும் பொருட்டும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் வாகன எண்களை கண்டறியும் உயர்ரக தானியங்கி ANPR கேமரா முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் E-Challan Device-கள் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு 30, போக்குவரத்து ஒழுங்கு பிரிவிற்கு 17 என மொத்தம் 47 அபராதம் விதிக்கும் கருவி (E-Challan Device)-களின் பயன்பாடு குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கண்ட 47 E-Challan Device-கள் மூலம் இந்த ஆண்டில் (2023) மொத்தம் 3,76,560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகையாக ரூ.34,51,97,705 விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஒட்டியவர்கள் மீது 1208 வழக்குகள் (Drunken Drive) பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாத பட்சத்தில் அவர்களுடைய அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தின் மூலம் கைப்பற்றி அபராத தொகையை வசூல் செய்து நீதிமன்றத்தில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இந்த வசூல் செய்யும் நடைமுறையானது சென்னை பெருநகர காவல்துறையில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
மேலும் வாகன சோதனையின் போது காவலர்கள் பொது மக்களிடம் பணிவுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மது அருந்தியும், ஒட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிவேகமாகவும், அலைபேசியல் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்றவை கடும் சாலை விதி மீறல்கள் ஆகும்.
இவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதிகப்படியாக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து விபத்துகளை தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.