திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக 52 வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடந்தது . அதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் பெல் கணேசா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா திரு உருவப் படத்திற்கும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்து 52 வது ஆண்டில்
அடி எடுத்து வைக்கிறது. அதனை அதிமுகவினர் உற்சாகமாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் பெல் கணேசா பகுதியில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி புறநகர்தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் எம் ஜி ஆர் சிலையின் கீழே உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் பெல் கணேசா பகுதியில் கட்சி கொடியை கட்சியின் மூத்த நிர்வாகி ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு சிற்றுண்டி வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு
‘இந்த விழாவில் ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், அவைத்தலைவர் சுரேஷ்,நகர தொழில்நுட்ப அணி செயலாளர் செந்தில் குமார் , மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவிசுப்பிரமணி, அதிமுக நிர்வாகிகள் ராஜராஜன்,நவல்பட்டு பால மூர்த்தி,ரோஷன் முருகானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.