இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் கடும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி கொல்லப்பட்டார். இவர் ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துவரப்படுவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், காசா முனை மீது இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒசாமா அல் மசினி கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.