Skip to content

திருச்சியில் லியோ திரைப்படத்தின் விதிகள்… கலெக்டர் உத்தரவு…

தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள் அதாவது, காலை 9 மணி முதல் முதல் மறுநாள் அதிகாலை 01.30 மணிக்கு முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

திருச்சி வருவாய் கோட்டாட்சியர்: 9445000455
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் – 9445461797
லால்குடி வருவாய் கோட்டாட்சியர் -9445000456
முசிறி வருவாய் கோட்டாட்சியர் – 9445000457.

மேற்கண்ட எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *