பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த தொண்டமாந்துறை கூட்டுறவு வங்கியின் செயலாளர் கணபதி வயது 56 வங்கியின் உள்ளே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல் இன்று காலை வங்கியின் பணியாளர்கள் வங்கியின் உள்ளே வந்து பார்த்த போது கணபதி என்பவர் தரையில் படுத்து கிடந்த நிலையில் உள்ளதை கண்டு சந்தேகமடைந்த அவரை தூக்கி பார்த்திருக்கிறார். அப்போது அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது . இதைக் கண்ட பணியாளர் அதிர்ச்சியடைந்து பின்னர் அரும்பாவூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேத உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்சனையா அல்லது பனிச்சுமை காரணமா என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆடிட்டிங் பணி காரணமாக திருவண்ணாமலை சென்று இன்று விடியற்காலை தான் ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது