Skip to content

திருச்சி அருகே பள்ளத்தில் விழுந்து 1ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டியை அடுத்த குண்டுமணிப் பட்டியைச் சேர்ந்த வேதாச்சலம் வயது (35) இவர் ஆசாரி மர வேலை செய்து வருகிறார் இவரது மனைவி கல்பனா வயது (32) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு சிந்துஜா வயது (8 ),சஹானா வயது (6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . இருவரும் குண்டுமணிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் சிந்துஜா 3-ஆம் வகுப்பும் சஹானா 1- வகுப்பும் படித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற சஹானா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினார்கள் . பின்பு

குண்டுமணிப்பட்டியில் புதிய பால்வாடிக் கட்டிடம் கட்ட கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக பால்வாடி கட்டிடம் கட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 12 -அடி ஆழத்தில் குழித்தோண்டப்பட்டுள்ளது. இந்தப் பால்வாடி கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட குழியின் அருகே பொதுமக்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. மேலும் குழந்தைகள் மையம் 2 -அடி தூரத்தில் செயல்பட்டு வருகிறது குழி தோண்டிய பிறகு எந்த விதமான அபாய தடுப்புகளோ? முன்னெச்சரிக்கை வாசகமோ வைக்கப்படவில்லை?.

இந்த குழியில் நேற்று முன்தினம் பெய்த மழை நீர் தேங்கி குழி தெரியாமல் இருந்து வந்தது இந்த குழியின் விளையாடிக் கொண்டிருந்த சஹானா எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டார் குழி ஆழமாக இருந்ததாலும் மழை நீர் தேங்கி இருந்ததால் குழியின் நீரில் சஹானா மூழ்கி விட்டதாக தெரிய வருகிறது உடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சஹானாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சஹானாவை பரிசோதித்த மருத்துவர் சஹானா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் பின்பு பிரேத பரிசோதனைக்காக முசிறி

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பால்வாடி அமைக்க தோண்டப்பட்ட குழியில் பச்சிளம் குழந்தை விழுந்து இறந்தது முழுக்க முழுக்க எந்தவிதமான தடுப்புக்களும் அபாய வாசகம் அடங்கிய அட்டைகளும் வைக்காத பால்வாடி மையம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்தவரே முழு பொறுப்பு என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர் இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்வாடி அமைக்க தோண்டப்பட்ட குழுவின் மிக அருகில் குழந்தைகள் மையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் அதிகம் உள்ளதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்புகள் வைத்திருந்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும்? என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *