Skip to content
Home » காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட முன்னணி பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

பின்னர் அங்கு இருந்த பட்டு சேலைகளை பார்வையிட்டார்.
உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி,காஞ்சிபுரம்,பட்டோலா, ஐகாட்,ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகள் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் பல்வேறு வகையான சேலைகள் லெகங்கா மற்றும் ஆண்கள், குழந்தைகளுக்கான நவீன ஆடைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

*பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்:-*

கோவைக்கு முதல் முறையாக திறப்பு விழாவிற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.திறப்பு விழாவிற்காக வந்த நான் வாடிக்கையாளராக மாறி சில சேலைகளை வாங்கியதாக கூறினார்.

5-ம்,6-ம் வகுப்பு படிக்கும் போது கண்ணாடிக்கு முன் நின்று சேலை அணிந்து ரசித்தாகவும் சேலை கட்டுவது நமது கலாச்சாரத்தில் முன்னிறுத்துவதாக கூறினார்.

இதுபோல் திறப்பு விழாவிற்கு வரும் போது சேலைகளை அதிகளவு வாங்குவதாகவும் சில சமயம் அம்மாவிடம் இருந்து சேலையை சுட்டு விடுவதாக நகைச்சுவையாக கூறினார்.

ரகு தாத்தா,ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருவதாகவும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற படத்தில் நடித்து வருவதாக தெரிவித்தார்.

வருகின்ற காலங்களில் தற்போது காலகட்டத்தில் கைத்தறி புடவை எல்லை மதிப்பு குறைந்துள்ளது அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நமது கலாச்சாரம் அழிந்து வருவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *