திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியிலிருந்து தண்டாங்கோரை வரை புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை குறுகிய சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை பணிக்காக சாலையோரம் செல்லும் பாசன வாய்க்கால் மண்ணை எடுத்து பக்கவாட்டில் அணைத்துள்ளனர். இதனால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் பாசன வாய்க்காலில் மண்ணை எடுக்க வேண்டாம் என ஒப்பந்ததாரர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் தண்டாங்கோரை
யிலிருந்து லாரி் ஒன்று நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி சாலையோரம் இருந்த மண் சரிவில் சிக்கி பாசன வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்கள்ளானது.இதில் லாரியில் பயணம் செய்த டிரைவர் உட்பட 3 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்தைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.