பெரம்பலூர் மாவட்டம், அருமடல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் நான்கு ரோடு பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். இந்நிலையில் 4 ரோட்டில் இருந்து தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு பழைய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக காமராஜ் ஆர்ச் சிக்னல் நின்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஷேர் ஆட்டோவை முன்னெடுக்க எடுக்க கூறியதால் பாலமுருகனுக்கும் மக்கள் நீதி மைய மாவட்டச் செயலாளருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பில் இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தன் கையில் இருந்த ஹெல்மெட்டால் ஆட்டோ ஓட்டுநரின் பிண் தலையில் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தார் . உடனே அருகில் இருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றார் . பாலமுருகன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கம் பதிவு செய்து மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.