புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் முதல் கேடயப்பட்டி வரை நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சாலையில்
அமைக்கப்பட்டு வரும் பாலபணிகளையும் பார்வையிட்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.