நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம்
வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பல நாட்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனை விஜய்யும் மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தை ஐடி விங், மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி என ஒவ்வாரு பிரிவாக பலப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அடிக்கடி விஜய்யை அரசியல் ரீதியாக வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைப்பது வழக்கம். இந்தநிலையில் திருச்சியில் விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட செயலாளர்
வினோத்தின் ஆதரவாளர்கள் விஜய் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டரில் … நா ரெடி தான் வரவா..அண்ணன் நா இறங்கி வரவா என அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இந்தநிலையில் சுவரில் இருந்த விஜய் ஆதரவு போஸ்டர்களை செந்தில் ஆதரவாளர்கள் கிழித்துள்ளனர். செந்தில் விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட தலைவராக இருந்தவர். திருச்சி கருமண்டபம் பகுதியில் பாலியல் தொழில் நடந்தாக எழுந்த புகாரில் கைதானவர் செந்தில். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் மீது விஜய் மக்கள் இயக்கம் தலைமை நடவடிக்கை எடுத்து விட்டதாக தகவல் வெளியானது. அதிலும் குறிப்பாக வினோத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட தலைவர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த செந்தில் சென்னையில் விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த்தை சந்தித்து விட்டு வந்த பிறகு அவர் தொடர்ந்து பொறுப்பில் இருகிறார். விஜய் மக்கள் கட்சியின் நிர்வாகம் செந்தில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் செந்தில் தரப்பிற்கும் வினோத் தரப்பிற்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாகவே லியோ திரைப்படத்திற்காக வினோத்தின் ஆதரவாளர்கள் ஓட்டிய போஸ்டர்கள் செந்தில் தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் செந்தில் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் புஸ்சி ஆனந்த் தான் இந்த மோதல் சம்பவங்களுக்கு காரணம் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்…