கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு ஏலக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் தினேஷ் (43).இவருக்கு திருமணமாகி குமாரி என்ற மனைவியும், தீரஜ் மற்றும் தனுஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்துவந்த தினேஷ் விடுமுறையையொட்டி கடந்த 6-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் குலசேகரம் பகுதியில் பெய்த கனமழையால் தினேஷின் வீட்டிலிருந்த இன்வெர்டடர் சேதமடைந்துள்ளது. இதையடுத்து சேமடைந்த இன்வெர்டரை தினேஷ் பழுதுபார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தினேஷ் மீது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தினேஷை குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார்.
இது குறித்த தகவலறிந்த குலசேகரம் போலீசார், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.