திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில்
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள
கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில்
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும்
அக்டோபர் 11 ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண்
குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி புள்ளம்பாடி அருகே கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொசலி தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளான
பெண் சிசுக்கொலை, கருக்கலைப்பு,பாலின சமத்துவம், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், பெண் குழந்தைகள் கல்வி இடைநிறுத்தம் குறித்தும் பெண் குழந்தைகளின் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1986 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்தும் பெண் குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்களான செல்வமகள் சேமிப்பு திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், மூவாலூர் இராமமிர்தம் உயர்கல்வி திட்டம் குறித்தும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார். அங்கன்வாடி மைய பணியாளர்கள் அமுதா, தீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.