திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. ரெட்டியாப்பட்டியிலிருந்து கோனேரிப்பட்டி செல்லும் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை மர்ம நபர் ஒருவர் இருச்கர வாகனத்தில் கட்டி எடுத்துச்செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்திலுள்ள தோட்டவாசிகள் அவரை விரட்டிப்பிடித்தனர். தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆட்டை திருடியவர் சிறுநாவலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 28 என்பது தெரியவந்ததன் பேரில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.