பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் கழகத்தினர் தீவிரமாக ஈடுபட வேண்டி மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்திய தேர்தல் ஆணையம் எதிர்வரும் 01.01.2024 -ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்காணும் அட்டவணைப்படி அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்,குன்னம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், 2024-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த சுருக்க பணிகள் 27.10.2023 -ம் தேதி முதல் 09.12.2023-ம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்களை நீக்கம் செய்யவும்,பெயர்களை திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 04.11.2023, சனிக்கிழமை,
05.11.2023, ஞாயிற்றுக்கிழமை,
18.11.2023, சனிக்கிழமை,
19.11.2023, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் தற்போது புதிதாக சேர்ப்பதற்கு
படிவம் 6,
ஆதார் எண் சேர்ப்பதற்கு படிவம் 6 பி,
பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7,
எழுத்துப்பிழைகள், முகவரி மாற்றம் செய்வதற்கும், வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்க விரும்புவதற்கு படிவம்
8, ஆகியவற்றை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.
இந்த முகாம்களில் பெறப்படும் அனைத்து வகையான படிவங்களும் பரிசீலனை செய்யப்பட்டு 05.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 01-01-2024 அன்று 18- வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
இதனடிப்படையில் 2024,ம் ஆண்டு ஜனவரி 01–ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணையின்படி சிறப்பு முகாம்கள் நடைபெற விருக்கும் நாட்களில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச்செயலாளர்கள்,
அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,
கிளைக்கழகச்செயலளர்கள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள்(BLA-2), பூத் கமிட்டி உறுப்பினர்கள்(BLC) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிகள் குறித்து கழக நிர்வாகிகள் மாவட்ட கழக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறன். இவ்வாறு குன்னம் சி.இராஜேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.