கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும், தண்ணீர் திறந்து விடாமல் தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு விவசாயிகளின் நலனை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து விவசாயிகள் கூட்டு இயக்கம் மற்றும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே அனைத்து விவசாயிகள் மற்றும் திமுக, காங்கிரஸ்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலா அருள் செல்வன் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.