உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும்,உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும்,தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என காவிரி படுகை விவசாயிகள் பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்தது. இந்த போராட்டத்துக்கு அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
அதன்படி திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டு இருந்தன. வணிகர்கள் மற்றும் திமுக தலைமையில் அனைத்து கட்சியினர் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மறியல் செய்ய தபால் நிலையம் முன் திரண்டனர். அங்கிருந்து முழுக்கங்கள் எழுப்பியவாறு பிஎஸ்என்எல் அலுவலகம் வந்தனர். வாசலில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்தும் கோஷம் போட்டனர்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி ராஜாமுகமது, அஷ்ரப், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர், அயிலை சிவசூரியன், மாவட்ட திமுக அவைத்தலைவர் அம்பிகாபதி,திருவரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ், காஜாமலை விஜய், மாவட்ட துணைச்செயலாளர் கிராப்பட்டி செல்வம், கவுன்சிலர் கலைச்செல்வி
மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், சமூக நீதிப் பேரவை நிர்வாகி ரவிக்குமார், முசிறி நகர திமுக செயலாளர் சிவா, உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.