திருச்சி மாவட்டம், துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கங்காணிப்பட்டி கிராமத்தில் சேவல்சண்டை நடந்து வருவதாக துறையூர் காவல் துறைக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் துறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு கோழிகளுக்குல் சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புலிவலம் நடுத்தெரு காலனியில் வசித்து வரும் ராஜா (28) என்பவரும் மற்றும் துறையூர் மதுராபுரியை சேர்ந்த ஹரிஹரன் (21 )என்பவரும் கங்கானிபட்டி கருப்பு கோவில் அருகே கோழி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்கள். அப்போது இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சண்டை கோழி, இரண்டு இரு சக்கர வாகனம், மற்றும் ரொக்கம் 1200 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை துறையூர் போலீசார் தேடி வருகிறார்கள். கிராமங்களில் கோழி சண்டை ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.