இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, மருமகன் பரமேஷ், கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாஷாவின் மனைவி ரெஹா பானு மற்றும் ஆ.ராசாவின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 17 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடதக்கது.. றிப்பிடத்தக்கது.