நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை, தடுக்க முடியாத சக்தி என்று அழைப்பதில் தவறில்லை. கிங் கான் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு ராஜாவைப் போல் ஆட்சி செய்து வருகிறது. இப்படம் தற்போது 5வது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும், புதிய வெளியீடுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல படங்கள் வந்த பிறகும், ஜவான் உலகளவில் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 1117.36 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வலுவாக உள்ளது. மற்றும் இந்தியாவில் மட்டும் 626.37 கோடியை வசூலித்துள்ளது.
ஜவான் இந்தியா பாக்ஸ் ஆபிஸில் தன்னை ஒரு வலுவான வீரராக வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. அதன் வசூல் எண்ணிக்கை 626.37 கோடி வசூலுடன் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. இந்தியா சினிமா வரலாற்றில் (அசல் மொழி) அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படமாக ஜவான் வரலாறு படைத்துள்ளது. இப்படம் இந்தியில் 566.33 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மற்றும் பிற
மொழிகளில் 60.04 கோடி வசூல் செய்தது. கூடுதலாக, வெளிநாடுகளில் அதன் வசூலைப் பார்க்கும்போது, படம் மொத்தம் 45.39 மில்லியன் டாலர்களுடன் வலுவான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் ஜவான் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 1117.36 கோடி வசூல் செய்துள்ளது. “ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.