ஒண்றினைவோம் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை குனியமுத்தூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் மாநிலத் தலைவர் ராஜா, மாநில பொதுச் செயலாளர் சிவநேசன், மாநில பொருளாளர் ஜக்கிரியா, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாநகராட்சி துணைமேயர் வெற்றிச்செல்வன்
மற்றும் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் சங்கத்தின் நன்மைகளை. கருத்துக்களை தெரிவித்தார்.
பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு காப்பீடு திட்டம். மத்திய மாநில அரசு தரும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் பெற்று தருகிறோம். பெயிண்டர் மட்டும் ஓவியர்களுக்கு தொழில் சார்ந்த உதவிகள் வழங்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்து பெயிண்டர்ஸ் மற்றும் ஓவியர் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இயற்கை பேரிடர் ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு சங்கத்தின் மூலம் உதவி செய்யப்பட்டது. இந்த விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.