அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயவியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் நேற்று பிற்பகல் அமைச்சர் சிறைக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் , அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அமைச்சரின் உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரினார். அந்த மனு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி கூறினார்.